தொலைக்காட்சி நாடகத்தால் பலியான சிறுமி !
தொலைக்காட்சி நாடக தொடரை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவ ட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். (கூலித் தொழிலாளி) சைத்ரா ஆகியோரின் மகள் பிரார்த்தனா (வயது 7) 2- ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளாள்.
வீட்டில் தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட கன்னட நாடகத்தை பார்ப்பதனை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இந்த நாடகத்தில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்துள்ளன. அதைப் பார்த்த பிரார்த்தனா, தானும் கையில் ஒரு பேப்பரை எடு த்து தீ வைத்துக்கொண்டு நடனமாடியுள்ளாள்.
அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றியுள்ளது. வலி தாங்க முடியாமல் சிறுமி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து அரச மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தாள். இதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த புகாரின்பேரில் ஹரிஹரா டவுன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரார்த்தனாவின் தந்தை மஞ்சுநாத் இது தொடர்பில் கூறுகையில், ‘‘குழந்தைகளை தொலைக்காட்சி நாடகம் பார்ப்பதை தடுக்க வேண்டும். நான் என் மகளை கண்காணிக்கத் தவறி விட்டேன். என் மகள் உடலில் தீ வைத்து நடனமாடி உயிரிழந்திருக்கிறாள்.
இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Share1
TAGS
தொவைக்காட்சி நாடகம் கதாபாத்திரம் சிறுமி தீ பலி கர்நாடகா இந்தியா
RELATED NEWS
தொலைக்காட்சி நாடகத்தால் பறிபோன சிறுமியின் உயிர்
தொலைக்காட்சி நாடக தொடரை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017-12-02 10:54:19 தொலைக்காட்சி நாடகம் கதாபாத்திரம்
சமுத்திரங்களில் பிளாஸ்டிக் சேர்வது தொடர்பில் பூச்சிய சகிப்புத்தன்மை
சமுத்திரங்களிலான பிளாஸ்டிக் மாசாக்கம் தொடர்பில் பூச்சிய சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பது குறித்து கென்ய நைரோபி நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் தொடர்பான உச்சிமாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
2017-12-02 10:32:08 சமுத்திரங்கள் பிளாஸ்டிக் நைரோபி
பாகிஸ்தானில் விவசாய பல்கலைக்கழக விடுதியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள விவசாய பல்கலைக்கழக விடுதியை இலக்குவைத்து 4 தீவிரவாதிகள் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் பலியானதுடன் 36 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
2017-12-02 10:27:33 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்
சவுதி எண்ணெய் கப்பல் மோதியதில் பாம்பன் மீனவர் நடுக் கடலில் மாயம்
சவுதியில் மீன்பிடி க்கச் சென்ற பாம்பன் மீனவர் நடுக்கடலில் மாயமானர் இதனால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக்கிராமங்களில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2017-12-01 15:00:54 சவுதி கப்பல் மீனவர்
கடல் சீற்றம்காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கடலாடி தாலுகாவில் உள்ள மூக்கையூர் மற்றும் ரோஜ்மாநகர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கடலோரப் பகுதியிலிருந்து கடல் சீற்றம் காரணமாக இரண்டாம் நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லையென எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2017-12-01 13:20:03
Search Articles...
TOP STORIES
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனையொன்றை நோக்கி இந்தியா
2017-12-02 10:58:48
ஆஷஸ் டெஸ்ட் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்
2017-12-02 10:42:56
சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் இருவருக்கு 18,27 வருட கடூழியம்
2017-12-02 10:39:23
மஹிந்த ஆட்சியை கவிழ்க்கவே ரணில் -– மைத்திரி கூட்டணி : திஸ்ஸ
2017-12-02 10:36:37
சமுத்திரங்களில் பிளாஸ்டிக் சேர்வது தொடர்பில் பூச்சிய சகிப்புத்தன்மை
2017-12-02 10:32:08