Breaking News

மாவீரர் துயிலும் இல்லம் தாவரவியல் பூங்காவாம் சிறீதரன்- தகர்த்தெறிந்த மக்கள்!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்கா வாக மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற நிலையில் அதற்கான பெயர் பலகை மக்களால் அடித்து தகர்த்தெறியப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் கீழ் கன கபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தி னை தாவரவியல் பூங்காவாக மாற்று வதற்கான நடவடிக்கையினை நாடா ளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முய ற்சித்துள்ளார். 

இதன் ஒரு கட்டமாக துயிலும் இல்ல த்திற்கு தாவிரவியல் பூங்கா என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர் பலகையினை நேற்றைய நாள் பிரதேச சபையினர் ஊடாக நாட்டியிருந்தார். ஏற்கனவே பலத்த எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த பெயர் பலகை நாட்டப்பட்ட இரவே அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளது.