இங்கிலாந்திடம் ஆஷஸ் கிண்ணத்தை பற்றிக்கொண்ட அவுஸ்திரேலியா !
அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பிரிஸ்பேன், அடிலெய்டில் நடைபெ ற்ற முதல் இரண்டு டெஸ்ட்களி லும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3-ஆவது போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி தொடங்கியது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 403 ஓட்ட ங்களை சேர்த்தது. பின்பு முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுக்களை இழந்து 662 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஸ்மித் இரட்டைச் சதம் அடித்தார்.
முதல் இன்னிங்ஸில் 259 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர் அலஸ்டயர் குக் 14, ஸ்டோன் மேன் 3, ஜோ ரூட் 14 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்களை இழ ந்து 132 ஓட்டங்களை எடுத்திருந்தது.
மலன் (28), பேர்ஸ்டோவ் (14) ஆகியோர் களத்தில் இருந்தனர்.நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக காலையில் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொட ங்கவில்லை.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் பேர்ஸ்டோவ் (14) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொயீன் அலி (11), கிறிஸ் வோக்ஸ் (22), ஓவர்டன் (12), பிராட் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தாவித் மலன் மட்டும் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இதனால் 2ஆவது இன்னிங்ஸில் 218 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆஸி. இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3–-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றி தொடரில் முன்னிலையாகியுள்ளது.