Breaking News

தமிழ் மக்கள் மீதான சோதனைகள் தேசிய சகவாழ்விற்குத் தடை !

தமிழர்கள் மீது நீதிக்கு முரணான விசாரணைகளும் கைதுகளும் தேசிய சக வாழ்வை ஏற்படுத்துவதில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்து மென ஜனநாயகப் போராளிகள் கட்சி விவரித்துள்ளது. 

மேலும் குறித்த கட்சியினர் அனுப்பி யுள்ள ஊடக அறிக்கையில் தெரிவி க்கையில், தமிழர்களை எந்த வேளை யிலும் எதற்காகவும் கைது செய்ய லாமென்பது இப்போதும் சிங்கள தேசம் தனது பேரினவாத மனோ நிலையிலிருந்து சற்றும் மாறவி ல்லை என்பதுடன் கடந்த கால கசப்பி யல் சந்தர்ப்பங்களில் இருந்து எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்ப துவே அண்மைய பாதுகாப்பு அமைச்சரது பேச்சுக்கள் சுட்டிக் காட்டியுள்ளது. வட கிழக்கு பரப்பெங்கும் 2009ம் ஆண்டிற்குப் பிறகு போராளிகள், பொதுக்கள் சமூக அமைப்புக்கள் மற்றும் பற்றாளர்களால் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக மக்களின் தன்னெழுச்சியான உணர்வுகளையும் மன வேட்கையினையும் பறை சாற்றியுள்ளது.  

மாறாக, தெற்கில் பெரும்பான்மையாக சிங்கள மக்கள் கூடிய நிகழ்வொன்றில் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிய கருத்துக்கள் தமிழர் தரப்பிலே பாரிய சந்தேகங்ளை ஏற்படுத்தியுள்ளது. 

அதிக வெளிப்பாட்டுத் தன்மையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் வார நிக ழ்வுகள், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகி யவற்றைச் சிதைக்கத்தக்க வகையான சம்பவங்களைத் தவிர்த்துக் கொள்ளு தல், ஏற்கனவே துயரங்களுடன் வாழும் தாயக மக்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலையைப் பேணுதல் என்ற இரட்டை நிலைப்பாட்டையும் எமக்குள் சுமத்தியுள்ளது.  

அவ்வாறான பின்னணியில் நடைப்பெற்றிருந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் எவ்வித அசம்பாவிதங்களும் அற்ற மக்களின் அபிலாஷைகளையும் உணர்வு களையும் மாத்திரமே பிரதிபலிப்பதாக நிறைவுற்றிருந்தது. யுத்தத்தின்போதும் தமிழர்கள் தம் மரபுரிமைகளை மீட்பதற்கான போரின்போதும் இறந்தவ ர்களை நினைவுகூருவது எந்தவகையிலும் பிரிவினையினையோ வன்முறை யினையோ எடுத்துக்காட்டப்போவதில்லை.

மாறாக உயிரிழந்தவர்களை நினைவேந்தி பூஜிப்பது தமிழர்களது நன்றி உண ர்வினையும் மன ஆற்றுகையையும் ஏற்படுத்திச் சென்றதென்பதே உண்மை யின் நிதர்சனம். 

இருப்பினும் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிய கருத்து க்கள் தமிழர் வாழ்வியல் மரபுரிமைகள் தமிழ் மக்களுடைய ஜனநாயக எழுச்சி மற்றும் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வெழுச்சியை தடுக்க நினை க்கும் நல்லாட்சி அரசின் ஓர் இடர்பாடான அணுகு முறையாகவே சிந்திக்க வேண்டியுள்ளது. 

தெற்கில் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவர்வதற்கான ஓர் இனவாதத் தோற்றத்தையும், வடகிழக்கிலே மீள் இணக்கம் மற்றும் தேசிய சகவாழ்வு என்ற வேடத்தையும், சர்வதேசப் பரப்பில் நீதி மற்றும் ஜனநாயக போர்வை யையும் போர்த்துக்கொண்டு இலங்கையின் நல்லாட்சி அரசு தனக்குள் தானே முரண்பட்டதொரு வகிபாகத்தை ஆற்றுகின்றதோ என்கின்ற சந்தேகத்தையும் கேள்வியையும் அது எமக்குள் ஏற்படுத்தியுள்ளது. 

நீதிக்கு முரணான விசாரிப்புக்கள் மற்றும் கைதுகள், தடுத்து வைத்தல், சித்தி ரவதைகளுடன் கூடிய விசாரணைகள் என்று தொடரும் அனைத்துலக குற்ற ச்சாட்டுகளுக்கு மத்தியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் இந்த வாதம் இலங்கையின் நல்லாட்சி அரசும் தேசிய இனங்களின் ஜனநாயக நடவடி க்கைககளின் மேல் தனது புலனாய்வு மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை திணிக்க எத்தனிக்கின்றதோ என்ற விசனத்தையும் எமக்குள் ஏற்படுத்தியு ள்ளது. 

இரானுவ மேலாதிக்கம் மற்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை விசார ணைகள் மற்றும் கைதுகளூடாக அணுகுவது என்பது சாத்தியப்பாடான மீளி ணக்கத்திற்கு எவ்வகையிலும் வலுச்சேர்க்காது என்பதுடன் அதுவே துயர ங்களை சகித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வியலில் மேலும் நெருக்கடிகளை உருவாக்குவதுடன் தேசிய சகவாழ்வை ஏற்படுத்துவதில் அது எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்பதை இலங்கையின் நல்லாட்சி அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழர்கள் தாம் வரிந்துகொண்ட தலைவரின் பிறந்தநாளினை கொண்டா டிக்கொள்வதென்பது அவர்களது பிறப்புரிமை வாழ்வுரிமையுடன் சம்பந்தப்ப ட்டது. 

அதனை பூதாரமாக்கி பெரும்பான்மையை திருப்திப்படுத்த கைதுகள் விசாரிப்பு க்கள் என முயல்வதென்பது இன்னுமொரு தடவையும் இலங்கைத்தீவை இட ர்கள் மிகுந்த தீர்வாக சர்வதேசம் உற்று நோக்க வாய்ப்பாகவே அமையும். 

சட்டரீதியற்ற கைதுகள் விசாரணைகள் மற்றும் அடக்கு முறைகள் தமிழர்கள் சுய நிர்ணயத்துடன் கூடிய சுய ஆட்சியொன்றிற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவே வழிவகுக்கும் என்பது காலத்தின் கடமையாகும்.