மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஏற்பாடு!
மத்தல விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட இந்தியாவுடன் இணைந்து இலங்கை மேற்கொள்ளும் கூட்டு முயற்சி திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
சீனாவுக்கு அண்மையில் மேற்கொண் டிருந்த உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மத்தல விமான நிலைய அபி விருத்தித் திட்டம், திருகோணமலை எண்ணெய்க் குதம் அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவுடனான கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இரண்டு நாடுகளுடனும், இலங்கை சுமுகமான நெருங்கிய கலாசார, மத, வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கிறது என்பதை சீனாவுக்கு நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.
பரஸ்பரம் அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில், இந்த நட்புறவு முன்னேற்றப்பட வேண்டியது முக்கியமானது என்றும் சீனாவுக்கு எடுத்துக் கூறி னேன். இந்த உணர்வுகளை சீனா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.