Breaking News

உலக அழிவிற்கான அறிகுறி தென்படுவதாக - அமெரிக்க விஞ்ஞானிகள் !

இவ் வருடம் நவம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து தொடர்ந்தும் பல நில நடு க்கங்களை பூமி சந்திக்கின்றது. 2018 ஆம் ஆண்டுக்குள் உலகம் நில நடுக்கங்க ளினால் பல அழிவைச் சந்திக்குமென  அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந் நிலையில் உலக அழிவு ஆரம்பி த்து விட்டதென சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் செய்திகளைப் பர  ப்ப ஆரம்பித்துள்ளனர். சதியாலோ சனை (Conspiracy theory) கோட்பாடு என்ப து யூகத்தின் அடிப்படையில் ஒரு தனி நபர் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்படும் கோட்பாடு ஆகும். அதன்படி பூமியின் அழிவுக்கு வித்திடும் நிரூபு கிரகம் தற்போது பூமியை நெருங்கி விட்டதாகவும் அதன் அறிகுறியே தற்போது நில நடுக்க ங்களாக தென்படுகின்றதென சதியா லோசனைக் கோட்பாட்டாளர்கள் தெரிவி த்துள்ளனர். 

அவர்களின் கருத்துகளின் நம்பகத்தன்மையினை வலுப்படுத்தும் வகையில் இந்த நவம்பர் மாதம் அதிக நிலநடுக்கங்கள் பூமி முழுவதும் தொடர்ச்சியாக ஏற்பட்டவாறு காணப்படுகின்றது. 

அதேபோன்று காலநிலையும் வெகுவாக மாற்றமடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது அதிகரித்துள்ள இயற்கை அனர்த்தங்களை காரணம் காட்டும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நிரூபு கிரகம் பூமியை நெருங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் நிரூபு எனப்படும் மர்மக்கிரகம் எமது சூரிய மண்டல சுற்றுப்பாதையில் நுழையப்போகின்றது அதனால் பூமியில் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக terral croft என்ற எழுத்தாளர் பூமி தற்போது பாரிய அழிவிற்கு ஆயத்தமாகியுள்ளதெனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றொரு வகையில் தற்போதுள்ள விஞ்ஞானிகள் நிரூபு கிரகத்தின் இருப்பு குறித்து வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பண்டையகால மக்கள் நிரூபுவின் இருப்பை நம்பியிருந்தனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. 

பண்டைய எகிப்து மக்கள் அழிவுக்கிரகமாக நிரூபினை வழிபட்டு வந்ததாகவும் அதற்காக ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வுகளிலும், பண்டைய சுவர் ஓவிய ங்களிலும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோன்று மதம் சார்ந்த கருத்துகளிலும் மர்மக்கிரகம் அல்லது பூமியின் அழிவு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துவரும் சதியாலோ சனை கோட்பாட்டாளர்கள் தற்போது பூமி அழிவு தொடர்பிலான அதிக பிரச்சா ரங்களில் ஈடுபட்டவண்ணமுள்ளனர்.