Breaking News

பதவியை இராஜினாமா முகாபே - ஆரவாரத்தில் குதிக்கும் மக்கள் !

சிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிம்பாவே வீதிகளில் அந்நாட்டு மக்கள் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகி யுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளமையையிட்டே, அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடுகின்றனர். 

பதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான், உலக நாடுகளின் தலைவர்களி லேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார். அவரது பதவி விலகல் அறிவிப்பால் நாடாளுமன்ற த்தில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கை கள் நிறுத்தப்பட்டன. அச் செய்தியைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவையிலே எழுந்து நடனமாடத் தொடங்கினர். அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் முன்பே அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களுக்குத் தயாராகினர். 

தகவல் வெளியானதும் தெருக்களில் கூடியிருந்த மக்களும் வாகன ஓட்டிக ளும் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஆடிப் பாடியும், வாகனங்களின் மீதும் ஏறி நடனமாடியும் சந்தோசத்தை ஆர்ப்பரிக்கின்றனர்.

முகாபே பதவி விலக வற்புறுத்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும், மக்க ளுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இந்நிலையில், முகாபே தொட ர்பான பல புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் கேலியாகப் பகிரப்பட்டு ள்ளது.