Breaking News

அரசியலுக்குள் குதிப்பதாக அதிரடி கிளப்பும் விவேக் ஜெயராமன்.!

போயஸ் கார்டனில் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு முன் அவரது செல்லப்பிள்ளையாக வலம் வந்த இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். 

ஜெயலலிதாவின் பெருமைக்குரிய  காரணத்தினாலேயே மிக குறைந்த வயதில் விவேக்கிடம் ஜாஸ் சினி மாஸ் மற்றும் ஜெயா தொலைக்கா ட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பு க்கள் வழங்கப்பட்டிருந்தன. 

சமீபத்தில் சசி உறவுகள் மீது தொடு க்கப்பட்ட வருமான வரிசோதனைகளும் விவேக்கை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டதாக பேச்சு நிலவிக்கொண்டிருக்கையில், தன்னிடத்தில் அரசியல் ரீதியிலான பொறுப்புகள் கொடுக்கப்பட்டால் நிச்சயம் அதனை ஏற்று செயற்பட ஆயத்தமாகவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார் விவேக் ஜெயராமன்.