Breaking News

வடமாகாண கல்வியமைச்சரின் பதவி பறிக்கப்படுமா ? ...தீர்வின் முடிவு தான் என்ன ?.....

தேசியக் கொடியை நிராகரித்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் மீதான நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிற்கு தெரிவி த்துள்ளது. 

இது தொடர்பான எழுத்து மூல அறி விப்பை சட்ட மா அதிபர் திணைக்களம் ஆளுநரிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் இந்நிலையில் இன்னும் ஓரிரு தினங்க ளில் இதற்கான அறிவிப்பை வடமா காண ஆளுநர் விடுப்பார் என எதிர்பா ர்க்கப்படுகின்றது. 

 வவுனியா இரட்டைப்பெரிய குளம் பகுதியிலுள்ள அரச பாடசாலையொன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண கல்விய மைச்சர், தேசியக் கொடியை ஏற்றுவதை நிராகரித்த சம்பவம் தென்னிலங்கை யில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தேசியக் கொடியை நிராகரித்த அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே வடக்கு ஆளுநரிடம் சட்ட மா அதிபர் திணைக்களம், கடி தம் மூலம் இதற்கான ஆலோசனையை அனுப்பி வைத்திருப்பதாக நம்பத்த குந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

இதன்படி வடமாகாண கல்வியமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவ டிக்கை குறித்து அக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.