இரண்டாவது டி20.. தேசிய கீதம்.. கண்ணீர் சொரிந்த அறிமுக வீரர்.!
ஒவ்வோர் கிரிக்கெட் வீரருக்கும் தனது தாய் நாட்டின் அணிக்காக விளை யாடிட வேண்டுமென்பது நிச்சயம் ஓர் பெருங்கனவாகும் அப்படியான ஓர் கனவு நேற்று தன் வாழ்வில் மெய்ப்படக்கண்டார் இந்திய அணியின் அறிமுக வீரர் ஹைதரபாத்தைச் சேர்ந்த 23 வயது மொகமது சிராஜு.
இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்து பிள்ளையை அவனது கனவை நோக்கிச் செலுத்தியுள்ளார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது, சிராஜை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கு வாங்கிய போது தான் கிரிக்கெட் உலகு அவரை அடை யாளம் கண்டுகொண்டது.
இவரின் அடிப்படை விலை ரூ.20 லட்சம்தான்.
10 மடங்கு அதிகமாக விலைக்கு வாங்கப்பட்டதால், கிரிக்கெட் உலகம் இவ ரைத் திரும்பிப் பார்த்தது. கடந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெ ட்டைக் கைப்பற்றினார்.
ஓய்வுபெற்ற ஆஷிஸ் நெஹ்ராவுக்கு பதில் சிராஜ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
நேற்று போட்டி துவங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்க ப்பட்ட போது சிராஜின் கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வழி ந்தது. அவருக்கு ஆறுதல் கூறினார் சக வீரர்கள். வாழ்த்துக்கள் சிராஜ் உங்கள் கனவுகள் யாவும் நனவாக.!