Breaking News

ரஷ்ய வீரர்களுக்கு வாழ்நாள் தடை;ஒலிம்பிக் குழு அதிரடி உத்தரவு !

ரஷ்ய வீரர்கள் ஐந்து பேருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடி யாதபடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பாவனை குற்றச்சாட்டிற்கு அமைய விசாரணை இடம்பெற்றதையடுத்து இத் தடை யுத்தரவை சர்வதேச ஒலிம்பிக் குழு விதித்திருந்தது.  

இதற்கமைய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் (Sergei Chudinov, Aleksei Negodailo, Dmitry Trunenkov, Yana Romanova and Olga Vilukhina) சேர்ஜய் சுடினோவ், அலேக்சை நெகோடைலோ, டிமிட்ரி ருனென்கோ வ், யானா ரொமானாவோ மற்றும் ஓல்கா விலுக்கீனா ஆகியோருக்கே இவ் அதிரடி உத்தரவு விடுக்கப்பட்டு ள்ளது. 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு ள்ளது.