உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு பதவி வேண்டுமாம் - மகிந்த
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டுமானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை தமக்கு வழங்க வேண்டும்.
அதற்கு இணக்கம் தெரிவித்தால் மட்டுமே அடுத்தகட்ட விடயங்கள் குறி த்து கலந்துரையாட முடியுமென ஸ்ரீல ங்கா சுதந்திரக்கட்சிக் குழுவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலில் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கும் பொது எதிரணியைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினருக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பின்போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்தித்துபேசவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் குழு இவ்விடயம் குறித்து எடுத்துக்கூறி ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிந்த பின்னர் நாளை மீண்டும் பொது எதிரணியின் குழுவினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தம்மில் இருந்து பிரிந்து செயற்பட்டுவரும் பொது எதிரணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவாரத்தைகளை நடத்திவரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் மத்தியில் முக்கியமான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேச்சுவாரத்தையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் பிரதிமைச்சர் லசந்த அலகியவன்ன ஆகியோரும் பொது எதிரணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, சி.பி. ரத்நாயக மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரும் கலந்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் பொது எதிரணியினர் முன்வைத்த நிபந்தனைகளில் பிரதானமான எந்தவொரு நிபந்தனையையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்றுகொள்ள முடியாத நிலையில் இச் சந்திப்பு முடிவைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
குறிப்பாக பொது எதிரணியினர் முன்வைத்த நிபந்தனைகளில் இரு தரப்பினரும் இணைந்து எதிர்காலத்தில் ஆட்சியினை அமைப்பதாயின் பிரதமர் பிரதமர் பதவியையும், கட்சியின் தலைமைப் பதவியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டதுடன் இந்த அரசாங்கம் பதவியிலிருக்கும் வரையில் பாராளுமன்றதின் எதிர்க்கட்சி தலை வர் பதவியினை பொது எதிரணியினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இக் கோரிக்கைகளே நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்திலும் பொது எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் பொது எதிரணியின் நிபந்தனிகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குழுவினர் எவ்விதமான தீர்மானங்களையும் அறிவிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடவேண்டிய தேவை உள்ளதாகவும் கூறி சந்திப்பை நிறைவு செய்துள்ளனர்.
இச்சந்திப்பு குறித்து பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்த தெரிவிக்கையில், எமது சந்திப்பு எவ்விதமான இணைக்கப்பாடும் இன்றியே முடிவடைந்தது.
நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் நிலைமையில் எம்மால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணங்கி செயற்பட முடியாது.
அவ்வாறான நிலையில் பொது இணைக்கப்பாடு எட்டப்பட வேண்டுமாயின் தேசிய அரசாங்கத்தின் காலம் முடிவுக்கு வரும் வரையில் பாராளுமன்றதின் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை எமக்கு வழங்க வேண்டும்.
இந்த நிபந்தனைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து செயற்படுவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள முடியும். ஏனைய நிபந்தனைகள் குறித்து பின்னர் சிந்திக்க முடியும்.
ஏனைய சிறிய காரணிகள் குறித்து இப்போதே இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளோம்.
எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதிலையடுத்தே நாம் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சிந்திக்க முடியும். இந்நிலையில் மீண்டும் நாளை மறுதினம் ( நாளை 28) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எமக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் அவர்களின் பதிலை நாம் எதிர்பார்த்துள்ளோம் எனக் குறிப்பி ட்டார்.
அமைச்சர் நிமல் கருத்து
சந்திப்பு குறித்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவிடம் வினாவியபோது அவர் கூறியதாவது, இரண்டு தரப்பினரும் இணைந்து செயற்படுவதே கட்சியையும் இரண்டு தரப்பையும் பலப்படுத்தும்.
அதற்காகவே நாம் இணைந்து செயற்பட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். இரண்டு தரப்பிலும் இணக்கம் காணக்கூடிய விடயங்களில் நாம் வெற்றி கண்டுள்ளோம். எனினும் ஒருசில விடயங்களில் நாம் தொட ர்ந்தும் சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் குறித்த விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கவுள்ளோம். நாளை மறுதினம் ( நாளை) மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழுவினர் பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
எவ்வாறு இருப்பினும் இப்போது இணக்கம் கண்டுள்ள காரணிகளை அடிப்படையாக வைத்து உள்ளூராட்சி தரப்பிலும் இணக்கம் காணக்கூடிய விடயங்களில் நாம் வெற்றி கண்டுள்ளோம். எனினும் ஒருசில விடயங்களில் நாம் தொடர்ந்தும் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் குறித்த விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கவுள்ளோம். நாளை மறு தினம் (நாளை) மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழுவினர் பொது எதிர ணியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார்கள்.
எவ்வாறு இருப்பினும் இப்போது இணக்கம் கண்டுள்ள காரணிகளை அடி ப்படையாக வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை இணைந்து எதிர்கொ ள்ளவே முயற்சித்து வருகின்றோம்.