மாவீரர் தினத்தை இலக்கு வைத்து இராணுவக் குவிப்பு !
வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டா டியதாக தகவல்கள் பதிவாகிய வண்ணமுள்ளது.
எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாதென இராணுவ ஊடகப்பே ச்சாளர் மேஜெர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன தெரிவித்தார்.
விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை என வும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் இன்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியல் புலிக்கொ டிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியமை குறித்தும் இச் சம்பவங்களின் பின்னர் வடக்கில் இராணுவத்தை குவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலை யில், இது குறித்து இராணுவ ஊடகப்பேச்சாளரிடம் வினாவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.