தங்கம் கடத்த முற்பட்ட இந்தியர் விமான நிலையத்தில் கைது !
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 4 தங்க கட்டிகளை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதி காலை 12.10 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைதாகியுள்ளார்.
குறித்த நபர் தமது உடலில் தங்க க்கட்டிகளை மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் மேற்கொண்ட சோத னையின் நிமித்தம் 71 கிராம் நிறை யுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ ற்றின் பெறுமதி 3 இலட்சத்து 55 ஆயி ரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என்பதுடன் அவர் இந்திய பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் சுங்கப்பிரிவினரால் அரசு உடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.