புலனாய்வுத்துறையின் பார்வையில் ஆரம்பமாகியுள்ள மாவீரர் வாரம்!
புலனாய்வுத்துறையின் அதீத பார்வையில் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் வாரம் எழுச்சியுடன் இன்று (21) ஆரம்பமாகியுள்ளது.
தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மிகவும் உண ர்வுபூர்வமாக இன்று ஆரம்பிக்கப்ப ட்டுள்ள மாவீரர் வாரத்தில், தமிழ் இன த்தின் விடிவுக்காக போராடி தமது உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களு க்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்கள் ஆயுத்தமாகியுள்ளனர்.
இருப்பினும் தமிழர் தாயகப்பகுதிகளில் புலனாய்வு துறையின் உச்சக்கட்ட கண்காணிப்பின் மத்தியிலேயே மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் வரிசையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 துயிலுமில்லங்கள் காணப்பட்டன.
தேராவில், முள்ளியவளை, ஆலங்குளம் (இராணுவம்) , வன்னிவேளாங்குளம், ஆலங்குளம் இராணுவத்தினர் வசமுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 துயிலுமில்லங்கள் காணப்பட்டன.
எல்லாங்குளம், வரணி, கோப்பாய் (இராணுவம்), உடுத்துறை, சாட்டி, கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவம் சுவீகரித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் ஒரேயொரு துயிலும் இல்லம் அதில் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2 துயிலுமில்லங்கள் அமைந்துள்ளன.
அதில் கனகபுரம் மற்றும் முளங்காவில் துயிலுமில்லங்கள் மன்னார் மாவட்டத்தில் 2 துயிலும் இல்லங்கள் அதாவது பண்டிவிரிச்சான், ஆக்காட்டிவெளி துயிலு மில்லங்கள், திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் துயிலுமில்லமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 துயிலுமில்லங்கள் தரவை மற்றும் வாகரை துயிலுமில்லங்கள் அமைந்துள்ளன.
யுத்தத்துக்கு பின் 5 துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பச்சைப்புல்மோ ட்டை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், இரணைப்பாலை, முள்ளி வாய்க்கால் இவை யுத்தத்தில் மாவீரர் புதைக்கப்பட்ட இடங்கள் ஆகும்.
தற்போது புனரமைப்பு தொடரப்பட்டு வருகிறது. இதில் இராணுவத்தினர் வச முள்ள துயிலுமில்லங்கள் அனைத்தும் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
ஏனையவை தனியாருக்கு சொந்தமானதாகவும் பொதுவானதாகவும் உள்ளன.
இதில் இராணுவத்தினர் அல்லாத ஏனைய துயிலும் இல்லங்களில், இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து பொதுமக்கள் சிரமதான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
புதைக்கப்பட்ட அழிக்கப்பட்ட கல்லறைகளை தேடி புனரமைத்து வருகி றார்கள்.
கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வ தற்கு தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது தடை எவையும் பிற ப்பிக்கப்படாமல் இருந்தாலும் மறைமுகமான புலனாய்வுத் துறையின் தீவிர கண்காணிப்பினுள் தான் இன்றும் இந்த மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.