Breaking News

நிபந்தனைகள் ஏதுமின்றி அரசியல் கைதிகள் விடுதலையாக வேண்டும்!

நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக அரசியல் கைதிகளையும் விடுதலையாக்க வேண்டுமென  உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் யோன்சன் கேட்டுள்ளார். 

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு உலகத் தமிழ் மாண வர் ஒன்றியம் ஆதரவு வழங்கி யுள்ளன.

இந் நிலையில் நேற்றையதினம் குறி த்த போராட்ட களத்திற்கு சென்ற உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொது ச் செயலாளர் ஆறுமுகம் யோன்சன் ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய போதே தெரிவித்துள்ளார்.  

மேலும் கூறுகையில்... அனுராதாபுரம் சிறைச்சாலையில் உண்ணா விரதம் இருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக எந்தவித நிபந்தனைகளுமின்றி நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். 

இல்லாவிட்டால் வட கிழக்குப் பகுதிகளில் அனைத்து மாணவர்கள், இளை ஞர்கள், யுவதிகள், அனைத்து பொது அமைப்புக்களையும் ஒன்று திரட்டி பாரி யதொரு மக்கள் போராட்டத்தை நடத்தவுள்ளளோமெனத் தெரிவித்துள்ளார். 

குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போரா ட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஜோன்சன் மேலும் கருத்துரைத்துள்ளார்.