இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் ஆதிக்கம் செலுத்துகின்றது - இலங்கை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் மைதானத்தில் இடம் பெற்று வருகின்றது.
மழை காரணமாக இப்போட்டி கடுமை யாக பாதிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையிலும் இலங்கை அணி கடும் ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனை த்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே பெற்றது. இதில் இந்திய அணியின் புஜாரா அதிகபட்ச மாக 52 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடத் தொடங்கிய இலங்கை அணி 4ம் நாள் உணவு இடைவேளையின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்பொழுது இலங்கை அணி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்களை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையிலும், மைதானம் பந்துவீச்சுக்கு மிக சிறப்பாக செயல்படுவதாலும் இப்போட்டியில் இலங்கையின் கை ஓங்கி யுள்ளதாக கிரிக்கெட் அபிமானிகள் தெரிவிக்கின்றனர்.