Breaking News

வடக்கில் குடும்பங்கள் நஞ்சருந்தும் நிலையில் புதிய அரசமைப்பு தேவையா தானா மஹிந்த!

வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பொன்று தற்காலத்தில் தேவைதானா என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி தொடுத்துள்ளார். 
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இறுதி நாள் விவாதம் ஸ்ரீலங்கா நாடாளு மன்றத்தில் இன்று நடைபெற்று வரு கின்றது. இதில் கலந்துகொண்டு உரை யாற்றிய போதே  இக் கேள்வி எழுப்பி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ச, வடக்கில் இன்று குடும்பங்கள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்கின்றனர், இளைஞர்கள் தொழில்வாய்ப்பு கோரி போராட்டம் நடாத்தி வருகின்றனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் புதிய அரசியலமைப்பு தேவைதானா? 

அவர்களுக்குரிய தீர்வுகளையே வழங்க வேண்டுமென அரசாங்கத்தின் கவன த்திற்கு கொண்டு வருகின்றேன். 

சமஷ்டி தீர்வும், வடக்கு – கிழக்கு இணைப்பும் கொண்டுவருவதன் ஊடாக அந்த மாகாண மக்களிடையே, இனங்களிடையே முறுகலும் கோபதாபங்க ளையே அரசாங்கம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஏனென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் கொள்கையான அறிவிக்கப்பட்டதொன்றுதான் வட-கிழக்கு இணைப்பை நிரா கரிப்பதாகும். 

இப்படியிருக்க, இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற கிழக்கு மக்களின் பிரதி நிதிகளும்கூட வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கின்ற நிலையில் அதனை எவ்வாறு செய்யமுடியும்? எனத் தெரிவித்துள்ளார்.  

தூக்கு மரத்தில் கழுத்தை வைக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறிய மஹிந்த ராஜபக்ச, தாம் இந்தியாவுக்குச் சென்று 13க்கும் மேலான தீர்வுக்கு செல்வதற்கும் தயார் என்று கூறியதன் அர்த்தம் இன்று திரிபுபடுத்தப்பட்டு சிலர் கூறிவருவதாக குறிப்பிட்டுள்ளார். 

 இதேவேளை 13க்கும் மேலான என்பதை தாம் கூறியதற்கான காரணத்தையும்  சபையில் இன்று விளங்கப்படுத்தினார். அதாவது, அந்த தீர்வை தாம் கூறியது நாட்டைப் பிரிப்பதற்காக அல்ல என்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் மக்கள் தங்களது அதிகாரங்களை அதிகரித்து, மத்திய அரசுடன் நேரடி பேச்சு நடத்தும் பலத்தை அவர்களுக்கு வழங்கவே என்றும் தெரி வித்துள்ளார்.

இந் நிலையில் மனசாட்சிக்கு உகந்த வகையில் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பில் அரச தரப்பு அமைச்சர்களு க்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் அரசாங்கம் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விருப்பம் என்றால் அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள் தமது பக்கம் வந்து இணைந்து கொள்ளலாம் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.