மத்திய வங்கி மோசடி விசாரணை யார் மீதும் இலக்கல்ல - மைத்திரி !!
இலங்கை மத்திய வங்கி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணை க்குழுவில் எவரையும் இலக்காகக் கொண்டு அமைக்கவில்லையென ஸ்ரீல ங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுதற்கு அடித்தளமிட்ட அமரர் மாது ளுவாவே சோபித்த தேரரின் நினை வை முன்னிட்டு கொழும்பு – பத்தர முல்லை 'எமது கிராமம்' பகுதியில் நினைவுத்தூபி ஒன்று நிர்மாணிக்க ப்ப ஷடவுள்ளது.
இதற்கான அடிக்கல் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம் முற்பகல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லாட்சியை அமைப்பதன் நோக்கம் தங்களது பைகளிற்குள் பணத்தை நிரப்பிக் கொள்வ தற்காக அல்ல.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக சக நாட்டு மக்களுக்கும் தெரிந்த விடயம். அதற்கு பொறுப்பானர்களே பொறுப்பு கூற வேண்டுமெனத் தெரிவி த்துள்ளார்.