Breaking News

மதிப்பெண் சான்றிதழில் ராகுல், சல்மான் படம் - மாணவர்கள் அதிர்ச்சியில் !

ஆக்ரா பல்கலைக்கழகம் வழங்க உள்ள மதிப்பெண் சான்றிதழில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா பீம்ராவ் அம்பேத்கர் பல்கலை க்கழகத்தின் பட்டமளிப்பு விழா விரை வில் இடம்பெறவுள்ளது. இதில் குடி யரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து  மாணவர்களுக்கு பட்டங்க ளை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

இந்நிலையில் இங்கு பயிலும் இரு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ராகுல் காந்தி, சல்மான் கானின் படங்கள் இடம்பெற்றமை  தெரிவிக்கப்பட்டு ள்ளது. 

மேலும், மற்றொரு மாணவரின் மதிப்பெண் சான்றிதழில், அவர் பெயருக்கு பதிலாக பீம்ராவ் அம்பேத்கர் என அச்சிடப்பட்டுள்ளது. தவறுதலாக அச்சிட ப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் சான்றி தழ் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.