Breaking News

பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது – சம்பந்தன் விவரிதம் !

புதிய அரசமைப்பில், பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது. அதனடிப்படை யில், நாட்டிலுள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழமுடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விவரித்துள்ளார்
“உத்தியோகபூர்வ மொழி சிங்களமும் தமிழுமாகும். அதனடிப்படையில், ஏழு மாகாணங்களில் சிங்கள மொழி யும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழி ஷயாகப் பயன்படுத்தப்படும் வகையில் அரசியல் யாப்பு உருவாக வுள்ளது” என்றார். 

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று (06) நடை பெற்றது. அதில் கலந்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளார். 

தொடர்ந்து உரையாற்றுகையில், “நாம் தற்போது 2017இன் இறுதியிலும் 2018 பிறக்கவும் உள்ள காலப்பகுதியில் உள்ளோம். எதிர்வரும் நாட்களில் பல தேர்தல்களை சந்திக்க வேண்டிய தேவையுள்ளது. 

இச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்” என்றார். “பிரதேச சபைகளில், மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோ பூர்வ மொழிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்கள், யாருக்கு அனு ப்பப்படுகின்றதோ, அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச உத்தியோகங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். 

இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும். எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.