படகு கவிழ்ந்ததில் லிபிய குடியேற்றக்காரர்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

அமைதியான கடல், பாதுகாப்பான பருவ நிலை காரணமாக லிபியாவி லிருந்து குடியேற்றக்காரர்கள் மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பா வுக்குப் புலம் பெயரும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நேற்று (25) இரண்டு படகுகளில் சுமார் இரு நூறு குடியேற்றக்காரர்கள் மத்திய தரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு படகு மூழ்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆபத்து சமிக்ஞைகள் விடுக்க ப்பட்டன.
இதைக் கேட்ட திரிபொலி கடற்படையினர் உடனடியாக சம்பவ இட த்துக்கு விரைந்தனர். எனினும், அதற்கிடையில் ஒரு படகு முழுமையாகக் கவிழ்ந்து விட்டது.
அறுபது பேரைக் கடலில் இருந்து மீட்டபோதும் சுமார் 31 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் திரி பொலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.