Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து நாட்டை சுவர்க்க பூமியாக மாற்றுமாம் - கயந்த கருணாதிலக

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி ஊடாக அதிகாரப் பரவலை எதி ர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டதன் ஊடாக, நாடு சுவர்க்க பூமியாக அமை யுமென காணி, நாடாளுமன்ற அமைச்சர் கயந்த கருணாதிலக கருத்து ரைத்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பின் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படு மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடா ளுமன்றத்தில் நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் வரை மட்டுமே இடம்பெறவிருந்த இடைக்கால அறிக்கை மீதான விவா தம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் கருத்துக்களை வெளி யிட வாய்ப்பு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தொட ர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகை யில் மேற்குறிப்பிட்டவாறு  தெரிவித்துள்ளார்.  

இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கருத்து தெரிவித்தவர்களிடம் இருந்து நாம் இரண்டு விடயங்களைத் தெரிந்துக்கொள்ள முடிகிறது. உண்மை யில் எமது நாடு முன்னேற விருப்பம் உடையவர்கள் யார் என்பதும், எமது நாட்டின் முன்னேற்றத்தை விட அரசியல் நடத்துவதை முக்கியமாக கொண்ட வர்கள் யார் என்பதையும் அறிந்துக்கொள்ள முடிகிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளி யில் ஒன்றை கூறுவார்கள். கூட்டு எதிரணியினரின் நாடகம் இன்று மக்கள் மத்தியில் வெளிப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்போதுமே பௌத்த மதத்திற்கே இந்த நாட்டில் அதிக உரிமை உண்டு எனவும் பௌத்த மதத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்து ள்ளார். 

இவ்வாறிருக்க ஒற்றையாட்சியினை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம் எமது நாடு சுவர்க்க பூமியாக முன்னேறும் என்பதில் நம்பிக்கை உள்ள தாக தெரிவித்துள்ளார்.