வடக்கில் எழுச்சியுடன் மாவீரர் தினம்; தெற்கில் கோட்டாவுக்கு வலை வீச்சு - வீரவன்ச!
மைத்திரி – ரணில் தலைமையிலான தேசத்துரோக ஸ்ரீலங்கா அரசாங்கம் உலக தமிழர் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியின் விளைவாகவே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர்வதை இன்று தடுக்க முடியாதிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவரது மாபெரும் உருவப்படம் காட்சிக்கு வைக்கப்படுகின்ற அதே வேளையில், தெற்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவரித்துள்ளார்.
பிரித்தானிய ஆட்சியுடன் போராடி வீர மரணமடைந்த வீர கெப்பட்டி பொலவின் 199ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு சம்துத்த ஜயந்தி மண்டபத்தில் நேற்றைய தினம் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா தேசத்துரோக பட்டியலில் நடைபெற்றிருந்த வீர கெப்பட்டிபொல வின் பெயர் கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட வர்த்தமானியின் ஊடாக அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இவர் சார்பான நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மகுமார உதயசாந்த, நிரோஷன் பிரேமரத்ன, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர உட்பட பலரும் கலந்து ள்ளனர்.
இந் நிகழ்வில் எதிர்காலம் நாங்கள் என்ற தலைப்பிலான இளைஞர் படையணி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச “யாழ்ப்பாண த்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது மாபெரும் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சில இனவாத தமிழ் மாண வர்களால் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவருக்காக வெட்டப்பட்ட கேக் ஊட்டி விடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக வவுனியா வளாகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந் நாடு எங்கு நோக்கி பயணிக்கின்றது.
தமிழ் மக்களின் மனதில் துக்கம் ஏற்படலாம் எனக்கூறி மே 18ஆம் திகதி யுத்தவெற்றியை கொண்டாடுவதை தவிர்த்த இவ் அரசாங்கம், வடக்கில் புலி களின் தலைவரை கொண்டாட இடமளித்ததினால் இனவாதத்தை எதிர்க்கும் சில தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மனங்களை ஏன் அறிந்து கொள்ள வில்லை? இதுவா நல்லிணக்கம்? இனவாதிகளுக்கு தீர்மானம் எடுக்கின்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா?...
விடுதலைப் புலிகளின் தலைவரது உருவப்படம் வடக்கில் ஏற்றும்போது, தெற்கில் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியலும், விடு தலைப் புலிகளின் விமானப் படையின் இரண்டாவது பிரதானிக்கு 2016ஆம் ஆண்டில் விடுதலை வழங்கப்படுகிறது.
ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ப்பதற்காக சுமந்திரன், கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தமிழ்மாறன், மங்கள சமரவீர ஆகியோர் உலக தமிழர் பேரவை யிடம் மண்டியிட்டதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இச் சந்திப்பின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 10 உடன்படிக்கைகள் குறி த்தும் அச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. அதனால் எங்கு ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டாலும், எங்கு கேக் வெட்டப்படாலும், எங்கு புலிகளின் கொடி ஏற்ற ப்பட்டாலும் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியும்.
ஆவா குழுவின் வாள்களுக்கு வடக்கில் தமிழ் மக்களின் உயிர்கள் பலியாக வேண்டும் என்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தன, யாழ் பல்கலைக்கழகத்தை கொளுத்தியும், யாழ் அபிவிருத்தி வாக்குகளைக் கொள்ளையிட்டு,
83இல் கறுப்பு ஜுலையை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மறைமுக சந்தர்ப்பம் வழங்கி விட்டது போல தற்கால தேசத்துரோக ஆட்சி யாளர்களும் அதே இனவாத, பாசிசவாத மற்றும் ஸ்ரீலங்கா தேசியக் கொடியை ஏற்ற மறுக்கும் அரசியல்வாதிகள் எழும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.