தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை சிவாஜிலிங்கம் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
வல்வெட்டித் துறையிலுள்ள தலை வர் பிரபாகரனின் இல்லத்தில் வைத்தே மேற்படி கொண்டாட்ட த்தினை செயற்படுத்தியுள்ளார்.
அத்து டன் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மரநடுகையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.