Breaking News

கோட்டாபயவை கைது செய்ய சதியாம் - மஹிந்த ஆதங்கம்!

ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை கைது செய்வதற்கான வேட்டை அடுத்து வரும் தினங்களில் அரங்கேறவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வு தெரிவித்துள்ளார். 

இதன் ஓரங்கமாகவே முன்னாள் பாது காப்புச் செயலாளரும், தனது சகோத ரருமான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான சதி இடம்பெறு வதாகத்   தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இடையே முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நேற்றைய தினம் இரவு நடை பெற்றது. இக்கலந்துரையாடலிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை ஏற்றுள்ளார். இச்சந்திப்பை முடித்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.