Breaking News

போராடி தமிழக முதல்வரைச் சந்தித்த தமிழக விவசாயிகள் !

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம்மைச் சந்திக்க வேண்டுமெனக்  கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி வைத்துள்ள கட ன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனக்  கோரி தலை நகர் டெல்லி வரை சென்று அய்யாக்க ண்ணு தலைமையிலான தமிழக விவ சாயிகள் நடத்திய போரட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. .

இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களது கோரிக்கை தொடர்பாக மத்திய அரசி டம் பேசி சிறந்த முடிவெடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து போரட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய விவசாயிகள் தமிழக முதலமைச்சர் சந்திக்க முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனிடையே தமிழக முதலமைச்சர் சந்திக்க வேண்டுமெனக் கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தமிழக விவசாயிகள் நடத்திய போரட்ட த்தை தொடர்ந்து அவர்களை சந்திக்க தமிழக முதலமைச்சர் ஒப்புக்கொண்டு ள்ளார்.