தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தாமதமின்றி நிறுத்தப்பட வேண்டும்!
இலங்கையில் தொடரும் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையிடம், பிரித்தானிய பாராளு மன்ற பிரதிநிதிகள் சபையின் தமிழர்களுக்கான குழு, அவசர அறிக்கையினை சமர்ப்பித்ததுடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை தாமதமின்றி நடாத்தி ஐ.நா கூட்டத்தொடரில் வெளியிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற பிரதி நிதி கள் சபையின் தமிழர்களுக்கான குழு தலைவர் லண்டனில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் மேலும் தெரிவிக்கையில்,
”அசோசியேற்றட் பிரஸ் நடாத்திய புலனாய்வு ஊடகவியல் மூலமாக, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதி ரான தொடர்சியான மனித உரிமை மீறல்கள் எந்த அளவு ஆழமானதாக உள்ளதென தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர் மீது தொடுக்க ப்பட்டுள்ள சமகால சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், பற்றிய அறி க்கையிடல் தொடர்பாக முன்வைக்கபப்பட்ட கேள்விகள், கரிசனைகள் பற்றிய விடயத்தை அக்கறைக்குரியதாக்கிறது.
இது மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் மேலும் தாமதமாக நடைபெறுவதாகவும் தமிழர்களை அடித்து சித்திரவதைபடுத்துதல், நீர்நிரப்பிய பைகள் மூலம் சித்திரவதை செய்தல், தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கு தல், எரியும் சிகரட்டால் சுடப்படுதல், சூடேற்றப்பட்ட இரும்பு கம்பிகளால் கட்டுதல், அதற்கான அடையாளங்கள், பாலியல் சித்திரவதைகள் மேற்கொ ள்ளப்பட்டதற்கான சான்றுகள், போன்றவற்றை வாசிக்கும் போது பயங்கரமாக இருக்கிறது.
இவையெல்லாம், நடைபெறுவது தொடர்பாக பெரும் கவலை என்னவெனில், இலங்கையில் பாதுகாப்பு படைகளை மறுசீரமைப்பதற்கு இலங்கைக்கு 6.6 மில்லியன் பவுன்ஸ் வழங்கப்பட்ட பிறகும் நடைபெறுகிறது என்பதே கவலை ஆகும்.
இதுவரை பாதுகாப்பு படை மறுசீரமைக்கப்படவில்லை என்பதையே காட்டி நிற்கிறது. அவ்வாறான வெளிநாட்டு பங்களிப்புக்களின் பிரியோசன மின்மை யை சுட்டிக்காட்டுவதாக அசோசியேற்றட் பிறசின் புலனாய்வு அறிக்கை அமைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்க ரமசிங்க ஆகியோர் வழங்கியுள்ள கடந்த காலத்தில் நடந்த மனித உரிமை களை விசாரிப்பதற்காக கொடுத்த வாக்குறுதிகள், அர்ப்ணிப்புகளை அந்த அறிக்கை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
இத்தகைய அரச ஆட்சியின் கீழ் இவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து அக்கறையற்ற மன்னிப்பு கொடுப்பது தொடர்கின்றபோதும், துஸ்பிரயோக ங்கள் அனுமதிப்பதுமான வேளையில் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின், அளவும் ஆழமும் ஐநா பொறுப்புடன் அவசரமாக செயற்பட்டு இந்த குற்றச்சாட்டுக்கள் தொட ர்பில், விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக அமைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் செய்ட் பின் ராட் செய்ட் அல் குசைன், எந்தவித தாமதமும் இன்றி இந்த விடயங்களை கரு த்தில் எடுத்து,
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமை கள் சபை கூட்டத்தொடரின் போது தனது விசரணை மூலமான கண்டு பிடிப்பு க்களை (அறிக்கையை) தெரிவிப்பதுடன் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டி ருக்கும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென நாம் ஐநா சபையின் மனித உரிமை ஆணையாளரை அவச ரமாக வேண்டி நிற்கிறோம்” என மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.