Breaking News

“கை“ சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானம் சுதந்திரக்கட்சி !

எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெறும் தேர்­தல்­களில் தமது கட்சி பங்­கா­ளிக்­கட்­சி­களை இணைத்துக்­கொண்டு கை சின்­னத்தில் பல­மிக்க கூட்­ட­ணி­யாக போட்­டி­யிடதீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரிவித்துள்ளது.

விரைவில் இடம்­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்­சி­ மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில், ஜனா­தி­பதி மாளி­கையில் நடைபெற்றது. 

இதன் போதே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான திலான் பெரேரா மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரி­வித்­துள்ளனர். 

கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் தொடர்­பாக கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க கருத்து தெரி­விக்­கையில், எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக பல­மிக்க கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கே காத்திருக்கி ன்றோம். இக் கலந்துரையாடலிற்கு கூட்டு எதிர்க்­கட்­சியில் உள்ள எமது கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுத்­தி­ருந்தேன். 

அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இணைந்து அர­சாங்கம் செய்­தாலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் இணைந்து போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை சுதந்திரக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனி த்தே கை சின்னத்தில் போட்டியிடுவதா தெரிவித்துள்ளார்.  

இதேவேளை இது தொடர்­பாக அமைச்சர்களான தயாசிறிஜயசேகர மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரி­விக்­கையில், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று நடைபெற்றுள்ளது. 

இதன்­போது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக தேர்­தலில் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொட ர்­பா­கவும் தொகுதி வாரி­யாக இந்த தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளதால் பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. 

அத்­துடன் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணைந்து பல­மிக்க கட்­சி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் தினங்­களில் மேற்­கொள்­ள­வது தொடர்­பா­க­வும்­ஆ­ரா­யப்­பட்­டது. 

அத்­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக கூட்­டத்­தின்­போது எந்­த­வித பேச்சும் இடம்­பெ­ற­வில்லை என்றனர். 

இதே­வேளை, ஜனா­தி­பதி தலை­மையில் நேற்று நடை­பெற்ற கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­துக்கு வரு­மாறு கூட்டு எதிர்க்­கட்­சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க அழைப்பு விடுத்­தி­ருந்­த­போதும் அவ­ரி­களில் யாரும் கலந்­து­கொள்­ள­வில்லை என்­ப­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ஷ் உள்­ளிட்ட அவ­ரது அணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 42 பேரின் கைச்­சாத்­து­ட­னான கடிதம் ஒன்றும் நேற்­று­முன்­தினம் கட்­சியின் பொது­செ­ய­லாளர் துமிந்த திஸா­நா­யக்­க­விற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், தேசிய அர­சாங்­கத்தில் இருந்து சுதந்­திர கட்சி வில­குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அர­சியல் யாப்பு உருவாக்கும் பணியில் இருந்து வில குதல், பிணை முறி விநியோக மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதி ராக நடவடிக்கையெடுத்தல் உள்ளிட்ட 7 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டு ள்ளன. 

இந்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆராயலாமென  தெரிவித்துள்ளனர்.