சம்பந்தனும் சுமந்திரனும் இனவாதிகள் அல்ல என - மஹிந்த சமரசிங்க !
ஆயுதம் ஏந்தாமல் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வொன்றை பெற்றுக் கொண்டோம் என்பதை தமிழ் மக்களுக்கு தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென துறை முக அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க ஆதங்கம்.
எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திர னும் இனவாதிகள் அல்ல என சான் றிதழ் அளித்த அமைச்சர், கூட்டமை ப்பிற்குள் சில இனவாதிகள் இருப்ப தால் அதில் ஒருவருக்கு சபையில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென குற்றம் சாட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவா தம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும் நடைபெற்று வரு கின்றது.
இவ் விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“அக் காலத்தில் இனவாத கருத்துக்களை எவ்வாறு சிலர் வெளியிட்டார்கள் என்பதை சம்பந்தன் அண்மையில் அவரது உரையினில் தெளிவுபடுத்தியி ருந்தார்.
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் இனவாதிகள் இல்லை ஆனால் அவர்களது கூட்டத்தில் இனவாதிகளும் இருக்கின்றனர். இம்முறை ஒருவருக்கு உரை யாற்றவும் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
எனவே மத்தியஸ்த நிலைக்கு வரும் இவர்களை நிராகரிப்பதா?
ஏற்றுக்கொள்வதா? என நாங்கள் சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்கு ம்படி இவர்களுக்கு நாங்கள் கொடுக்க வேண்டும்.
துப்பாக்கியை கையில் ஏந்தாமல் பேச்சு நடத்தி பெற்றுக் கொண்டோமென இவர்கள் தமது மக்களுக்கு சொல்ல வேண்டும்” என்றார்.
இதேவேளை சபை யில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இனப்பி ரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் 13ற்கு அப்பால் செல்ல முடியாது என்பதை திட்டகாத்திரமாக தெரிவித்துள்ளார்.
“அதிகாரப் பரவலுக்கு நாங்கள் ஆதரவு. அது 13ஆவது திருத்தத்திற்கு உட்பட்டு செய்யப்பட வேண்டும். 13ற்கு அப்பால் எங்களால் செல்ல முடியாது. அப்படி சென்றால் சமஷ்டி அரசியலமைப்பாக மாறிவிடும்.
தெரிந்துகொண்டே அதனை செய்யமுடியாது. ஆனால் இன்னும் பல அதிகார ங்களை மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியும். அரசியலமைப்புக்கு முர ணா ஷகாவிட்டால் அதிகாரங்களை பரவலடையச் செய்ய முடியும்.
2009 யுத்தத்திற்குப் பின்னர் ஜெனீவாவில் ஸ்ரீலங்கா தொடர்பான யோச னையை சர்வதேசம் முன்வைக்க முன்னரே நாங்கள் ஒருயோசனையை முன்வைத்து பல நாடுகளுடனும் பேச்சு நடத்தியிருந்தோம்.
அதில் தென்னாபிரிக்காவும், இந்தியாவும் ஒரு தர்க்கத்தை முன்வைத்தது.
பான் கீ மூன் ஸ்ரீலங்காவுக்கு வந்து முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டார்.
அதில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக ஸ்ரீலங்கா இணக்கம் வெளி யிட்டிருந்ததை இவ் ஆலோனையிலும் உள்ளடக்கப்பட வேண்டுமெனத் தெரி வித்தார். அதனை நாம் ஏற்றுள்ளோம்.
அதன் காரணமாகவே பெரும்பான்மையுடன் யோசனையை நிறைவேற்றி க்கொண்டோம். எனினும் அவ் ஆலோசனையை அமுல்படுத்தாத காரணத்தி னால் அதற்கடுத்து ஜெனிவாவுக்கு வந்த ஆலோசனைகள் தோற்கடிக்கப்பட்ட தாக விவரித்துள்ளார்.