ஹிருணிகா தவிர ஏனையோர் குற்றத்தை ஏற்றுள்ளனர் !
தெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களான 9 பேரில் நாடாளு மன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைத் தவிர ஏனைய எட்டுப் பேர் குற்றத்தை ஏற்றுள்ளனர். இவ் வழக்கு கொழும்பு மேல் நீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற விசா ரணையின் போதே சந்தேகநபர்களான 8 பேரும் குற்றத்தை ஏற்றுள்ளனர். எதிர்வரும் 24 ஆம் திகதி சந்தேக நபர்க ளுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. 2015ம் ஆண்டு ஹிருணிகாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்ப ட்டது.
2015ம் ஆண்டு ஹிருணிகாவுக்கு உரித்தான வாகனம் ஒன்றில் இளை ஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து பாராளு மன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளி ட்ட ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்ய ப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் போதே ஹிருணிகா தவிர்ந்த எட்டுப் பேரும் கடத்தல் சம்பவத்தை ஏற்றுக்கொண்டு ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.