Breaking News

அரியாலை இளைஞர் கொலைக்கான சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படைத்துறையினர் மீது சந்தேகித்த நிலையில் சிறப்பு அதிரடிப் படையின் புல னாய்வு அதிகாரிகள் இருவர் இன்று கைதாகியுள்ளனர். 

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் கடந்த வாரம் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை நேற்று முந்தினம் கைப்பற்ற ப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று பரிசோதகர் ஒருவரும், உப பரிசோதகர் ஒருவரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.