Breaking News

மைத்திரியை விமர்சிக்காதீர் ரணில் அதிரடி அறிக்கை !

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கும் முயற்சிகளில் எவரும் ஈடுபட வேண்டாமென பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலை வருமான ரணில் விக்கிரமசிங்க அறிக்கை விடுத்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளும ன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று நேற்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள. 

இவ்வேளையே தமது கட்சி உறுப்பின ர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இவ் உத்தரவை விடுத்துள்ளார்.  இதேவேளை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிய அதேவேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்க ளுக்கும் தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி யின் சில உறுப்பினர்கள் பகிரங்க மேடைகளில் விமர்சித்திருந்ததோடு, அத ற்கு பதிலடி வழங்கிய ஜனாதிபதி, இவ் ஆட்சியிலும் ஊழல்கள் தொடர்ந்தால் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு அதற்கெதிராகப் போராடுவதாக சூளுரைக்கப்பட்டுள்ளது.