ஒற்றையாட்சியுடன் கூடிய ஒருமித்த நாடு இதுவே என்பது எமது எதிர்பார்ப்பாகும் !
மத்தியிலும், மாகாணத்திலும் காணப்படும் நிறுவனங்களில் அதிகாரத்தை பிர யோகிக்க கூடிய ஒற்றையாட்சியுடன் கூடிய ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போச்சாளரும் பாராளு மன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் கல்முனை நால்வர் மண்டபத்தில் நடைபெற்ற போது உரையாற்றிய இவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கை யில்,
சிங்கள சிவில் சமூகம் அரசி யலமைப்பை கொண்டு வருவதற்கு பாடுபடுகின்றனர். இது தமிழ் பத்திரிகை யில் வருவதில்லை இதனை வேண்டாமெனச் சொன்னால் அதனை பெரி தாக்கி போடுகின்றனர்.
அரசியலமைப்புச் சபையூடாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் ஆகும். இடை க்கால அறிக்கையின் அறிமுகத்திலே பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைக்கூட படிக்காதவர்கள் இன்று இவ்வறிக்கை தொடர்பான பல குறை பாடுகளை முன்வைக்கின்றனர். இதனை பேராசிரியர்கள் உள்ளடங்கிய நிபுண ர்குழுவும் கூறுகின்றது.
இதில் சட்டம் ஒழுங்கு இல்லை என்று கூறியுள்ளனர். அது இவ்வறிக்கையின் அறிமுகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது இறுதியான முழுமையான அறிக்கையல்ல அறிமுகத்தை கூட படித்து பார்க்காதவர்கள் இதனை பிழை யென எவ்வாறு கூறுவது.?
இது நியாயமானதல்ல
எங்களுக்கு மிக முக்கியமானதொன்று. இதனை நாங்கள் சரியாக கவனிக்க வேண்டும். ஒன்றையாட்சி என்ற பதம் 1947 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதாகும்.
இதற்கு தற்போது மாறுபட்ட அர்த்தங்களும் கற்பிக்கப்படுகின்றது. எமது கட்சியின் கொள்கையாதெனில் அதிகாரங்கள் ஒரு இடத்தில் குவிக்கப்படக் கூடாது என்பதாகும். ஒற்றையாட்சி என்ற சொல்லின் பதம் காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளது.
இதனை இலங்கை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
'ஏகியராட்சிய" என்பது பிரிக்கமுடியாத ஒருமித்த நாடு பொருளாகும். உப குழு அறிக்கையில் சட்டவாக்க மொழி மூன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
அது சமவலுவுடையதாக இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியிலும், மாகாணத்திலும் காணப்படும் நிறுவனங்களில் அதிகாரத்தை பிரயோகிக்க கூடிய ஒற்றையாட்சியுடன் கூடிய ஒருமித்த நாடு இதில் பாது காப்பு தொடக்கம் அனைத்துவிடயங்களும் அடங்கும். அதுவே எமது எதிர்பார்ப்பாகும்.
இன்று அரசாங்கம் தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில், அரசாங்கம் தற்போது ஆட்டம் கண்டுள்ளதாகவும் கூறுப்படு கின்றது.
இதனைபற்றி சிந்திக்க தேவையில்லை சர்வதேசத்தின் அறிவுரைகள் எமக்கு என்று உண்டு எமது கோரிக்கையை நிறைவேற்றுவதே எமது நோக்கம். பொய்யான பிரச்சாரங்களுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டாம். மக்கள் விழி ப்பாக இருக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.