பாஜகவில் இணையவில்லை... பச்சை தமிழச்சி நான்... நமீதா அதிரடி
'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதையடுத்து பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
தன் அழகிய தமிழால் மச்சான்ஸ் என்ற வார்த்தை யால் எண்ணற்ற ரசிகர்களை தன்வசம் கொண்டு ள்ளவர். மேலும், சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சி களுக்கு நடுவராக விளங்கி வந்த இவர் சமீபத்தில் மிக பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டவர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டி யில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தன் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருக்கும் நமீதா, தன் மீது தமிழ் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் கண்டு பூரிப்படை வதாகவும் தெரிவித்தார். மேலும், கவர்ச்சி ராணி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பது தனக்கு பெரு மையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டாக தனக்கு அரசி யல் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தான் பாஜகவில் இணைந்து விட்டதாக வதந்திகள் பரவியுள்ளது, ஆனால் தான் எந்த கட்சியிலும் இன்னும் இணையவில்லை, அதை பற்றி யோசித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஒரு பச்சை தமிழச்சி தான் என்றும் பெருமையுடன் தெரி வித்தார் நமீதா.