பிரதமர் பதவி வழங்கினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் !
பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடரலா மென கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று (22) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சி யின் சந்திப்பொன்றின்போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது இந் நிலைப்பாடு பற்றி ஸ்ரீல.சு.க.வுக்கு கலந்தாலோசனை செய்ய சி.பி. ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகி யோரை கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ளது.