Breaking News

வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைப்பதற்காக ரணில்!

வடக்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே புதிய அரசியலமைப்பை கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நாடாளுமன்ற உறுப்பி னர் மகிந்தானந்த அலுத்கமகே இத னைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவிக்கையில், பிரத மர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் சுயநலனை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகாரமுடைய ஜயனாதிபதி முறைமைய இல்லாதொழித்தல், புதிய தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து இடைக்கால அறி க்கை தொடர்பான விவாதத்தில் அதிகமாக உரைக்கப்படுகின்றது. 

இவ் மூன்று விடயத்திலும் பிரதான மூன்று கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகளே நிலவுகின்றன. நாட்டில் வடக்கு மக்களுக்கு பிரச்சினை எனவும்  கடந்த காலங்களில் அவர்களுக்கு தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். 

அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால், இந்த அரசியலமைப்பு இடைக்கால அறி க்கையை தயாரிப்பதற்கு மும்முரமாக இருக்கின்ற இருவர் குறித்தே மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவர முயற்சிக்கிறார். வடக்கு மக்களை ஏமாற்று வதற்காக அவர் கொடுக்கும் சிறிய ஐஸிங் கேக் துண்டுதான் இந்த இடைக்கால அறிக்கை. 

புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்கர்கள் பூரண எதிர்ப்பினை வெளியிட்டி ருக்கும் நிலையில் அது குறித்து சற்றேனும் சிந்திக்கவில்லையெனத் தெரி வித்துள்ளார்.