பிரபாகரனின் புகைப்படங்களை பிரயோகித்தவர்களை கைது செய்ய நடவடிக்கையாம் !
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்த வர்க ளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
குறித்த நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜா ங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிக ழ்வொன்றில் கலந்து கருத்து வௌி யிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு இது போன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவி ரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.