ஐக்கியத்தை செயற்படுத்த விட்டுக்கொடுப்புடன் முயலும் சம்பந்தன்
நாட்டிலுள்ள அனைவரும் இலங்கையர் என்ற உரிமையுடன் ஒன்றிணையும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டுமென மட்டக்க ளப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் விவரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கம் ரட்னம் விளையாட்டுக்கழகத்தின் 23வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னி ட்டு நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்று ப்போட்டியில் பிரதம அதிதியாக கல ந்து உரையாற்றிய சந்தர்ப்பத்தில் தெரிவிக்கையில்....
நாட்டில் உள்ள மூவின மக்களும் சந்தோசமாக சமத்துவமாக வாழ்வதற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும்.
அத்தீர்வென்பது இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சமத்துவமானதாக இருக்கவேண்டும்.
எவரும் இரண்டாம் தர பிரஜைகளாக இருக்கக் கூடாது. ஒரு இனத்தினை க்கண்டு இன்னுமொரு இனம் அச்சம் கொள்ளும் நிலையில்லாமல் அனை வரும் சகோதரர்கள் என்ற ரீதியில் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகை யில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும்.
இதனை தங்களது சுயநல அரசியலுக்காக யாரும் பயன்படுத்திக்கொள்ள க்கூடாது. இனமோதல்கள், இனப்பகைகள் இல்லாமல் அனைவரும் சமத்து வமாக முன்னைய காலத்தில் இருந்த ஐக்கியத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் விட்டுக்கொடு ப்புகளுடன் செயற்பட்டு வருகின்றார்.
இந்த ஆண்டில் புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த யாப்பின் ஊடாக சகல மக்களும் அச்சமின்ற உரிமையுடன் வாழும் நிலை உருவாக்க ப்பட வேண்டும்.
அனைத்து மக்களும் சுயநிர்ணய உரிமையினை நிலை நாட்டி உரிமையினை பகிர்ந்து வாழும் நிலையேற்படுத்தப்படவேண்டும். சகல மக்களும் சுயமரியா தையுடன் தங்களது கௌரவத்தினை பேணிக்கொண்டு ஐக்கியமாக வாழும் நிலையினை புதிய அரசியல்யாப்பு அமைய வேண்டும்.
அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் சிலரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் எச்சரிக்கக்கூடிய விடயமெனத் தெரிவித்துள்ளார்.