Breaking News

பொறுமைக்கும் விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லையாம் - இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்பி ற்கும் இடமளிக்காதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொறுமையின் எல்லையை கூட்ட மைப்பு கடந்துள்ளதாக அரசாங்கத்தி ற்கு பல விட்டுக்கொடுப்புக்களை வழ ங்கியதாக தெரிவித்த சம்பந்தன், எதி ர்காலத்தில் அவ்வாறு நடக்க இடம ளிக்கப் போவதில்லையென குறிப்பி ட்டுள்ளார். 
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா மார்க்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று நாடாளு மன்றத்திலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இதனை நாம் அடைந்து கொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் கடும் அழுத்தங்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் புதிய அரசமைப்பு, ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் முன்னே ற்றங்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் இருவ ருக்குமிடையில் விரிவான பரிந்துரைப்பு நடைபெற்றுள்ளது.