பகுதி பகுதியான தேர்தலுக்கு இடமில்லையாம் - ஐக்கிய தேசிய முன்னணி
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது.
அனைத்து மன்றங்களுக்கும் ஒரே நாளிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய முறைமையில் சிக்கலாயின் சட்டத்திருத்தத்தின் மூலம் பழைய முறைமையை பின்ப ற்ற முடியும் இதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் இறுதியான நிலை ப்பாடாகும் என நேற்று மாலை அக்கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இத் தீர்மானத்தினை முன்னணியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து திட்ட வட்டமாக அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன் பின் அவசர அவசரமாக பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் அலரிமாளி கையில் நடைபெற்றுள்ளது.
இரவு எட்டு மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளாரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றி ருந்தனர்.
இதன்போது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அவதானம் செலு த்தப்பட்டது.
குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்ப ட்டிருக்காத நிலையிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 133 மன்ற ங்களுக்கு தேர்தலை நடத்தமுடியும் என்று குறிப்பிட்ட கருத்து தொடர்பிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் ஆழமான கவனத்தினை செலு த்தியிருந்தனர்.
மேலும் தேர்தல் காலதமாதப்படுவதும், பகுதி பகுதியாக தேர்தலை நடத்து வதும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும் பாதகங்களையே ஏற்படுத்தும். ஆகவே உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்திற்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு புதிய முறைமையில் அனைத்து மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதில் சட்டச்சிக்கல்கள் நீடிக்குமாயின் புதிய முறைமை யைக் கைவிட்டு பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். இதற்காக பழைய தேர்தல் திருத்தச்சட்டத்தில் சிறு திருத்தமொன்றையே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதனை காலதமதப்படுத்தாது மேற்கொள்ள முடியும் என்பதும் இக்கூட்ட த்தில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டு ஆராய ப்பட்டது.
அதனடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியானது தேர்தல் தாமதப்படுத்த ப்படுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றது என்றும் மேலும் காலதாமதம் ஆகுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அனைத்து மன்றங்களு க்கான தேர்தலும் ஒரே தினத்தில் நடத்துவதென்றும் புதியமுறைமையில் முடியாது விட்டால் பழைய முறைமையில் நடத்துவதறகு தயார் என்றும் ஏகோபித்த இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் இத்தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் நேரடியாக கூறுவார் என்றும் தீர்மானி க்கப்பட்டது.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சனிக்கிழமை சந்தி த்து உள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துவதை வலியுறுத்தவுள்ளதோடு ஐ.தே.முன்னணியில் தாம் எடுத்த முடிவையும் ஜனாதிபதியிடத்தில் முன்வை த்து வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.