Breaking News

இலங்கையுடனான உறவை பலப்படுத்துவதற்கு ஆவலாம் - இந்தியா !

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினை பலப்படுத்துவ தற்கு இந்தியா விருப்பத்துடன் உள்ளதாக இந்தியா ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். 
இந்தியாவிற்கு விஜயமாகியுள்ள பிர தமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்துக் கலந்துரையா டிய போதே இந்திய ஜனாதிபதி இத னைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும்  இத ற்காக இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவின் ஒரு தூணாக அமையும் வர்த்த க தொடர்புகளை வலுப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.  

அதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.