இராணுவத்தினரை யாழ் கோட்டைக்குள் குவிப்பதற்கு ஆளுநர் ஜனாதிபதிக்குக் கடிதம் !
யாழ் குடா நாட்டில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தி னரை யாழ் கோட்டைக்குள் மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி யுள்ளதாக வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே குறிப்பிட்டு ள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஆளுநர் செயல கத்தில் நடைபெற்ற செய்தியாளர்; சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவி த்தார். இதன்போது, கோட்டை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானதே? என ஊடகவியலா ளர் கேள்வி எழுப்பினார்.
கோட்டை க்குள், டச்சு, போத்துக்கேய, ஆங்கி லேய, இலங்கைப் படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் நிலை கொண்டி ருந்தனர். அப்போது அது தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமி ல்லையா? இப்போது மாத்திரம் எப்படிச் சொந்தமானது? என ஆளுநர் பதி லுக்குக் கேள்வி தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.