நாட்டு மக்கள் தம்முடன் இணைவதாக மஹிந்த கனவு !
ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் புரட்சியில் நாட்டு மக்கள் தம்முடன் இணைவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம், இன்றைய தினமும் நாடாளுமன்றத்தில் இட ம்பெற்று வருகையில் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்து ள்ளார்.
கடந்த இரண்டரை வருடங்களாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நல்லாட்சி அரசாங்கம் ஒத்திவைத்து வருவதை வன்மையாக கண்டித்த அவர், தமது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது ஆட்சிக்காலத்தில் கடனைச் செலுத்த முடியாமல் ஒருபோதும் அழவில்லையெனவும்ச ர்வதேச அமைப்புக்கள் போடும் தாளங்களுக்கு நடன மாடவில்லையெனவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சர்வதேசத்தை வெற்றிகொண்டதாக தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச அழுத்தங்கள் இல்லாத சூழ்நிலையில் கடன் சுமைகளை அதிகரித்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் ஸ்ரீலங்காவின் பணவீக்கம் மூன்று மடங்கில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.