'வெடி' தம்பி தமிழரசு கட்சியில் இணைந்தார்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில்
நீண்டகாலமாக கடமையாற்றிய வடமராட்சி கிழக்கு ஆழியவளையை சேர்ந்த வெடித்தம்பி என அழைக்கப்படும் தி.அருட்செல்வம் என்ற நபர் இன்று மன்னாரிலுள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் தமிழரசு கட்சியில் இணைந்துள்ளார்.
நீண்டகாலமாக கடமையாற்றிய வடமராட்சி கிழக்கு ஆழியவளையை சேர்ந்த வெடித்தம்பி என அழைக்கப்படும் தி.அருட்செல்வம் என்ற நபர் இன்று மன்னாரிலுள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் தமிழரசு கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக த.தே.கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவ கட்சி உறுப்பினர்களுக்கு சலுகைகளை வழங்கி தமது கட்சிக்கு அழைத்துவந்த தமிழரசு கட்சி தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பு முன்னாள் உறுப்பினர்களை தமது கட்சிக்குள் உள்வாங்குவதன் ஊடாக தாம் தேசியத்தின்பால் இருப்பதாக காட்ட முற்படுகிறது.
வரவுசெலவு திட்டத்திற்கான ஆதரவு மற்றும் இடைக்கால அறிக்கைக்கு அரசுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிவருவதால் பொதுமக்களை பொதுக்கூட்டங்களில் சந்திப்பதற்கே ஆளுக்கு மூன்று சிங்கள படைகளை கூலிக்கு அமர்த்தவேண்டிய நிலைக்கு கட்சி வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் சரிந்திருக்கும் மக்கள் செல்வாக்கை சரிசெய்வதற்காக மாவட்டம் தோறும் ஆட்களை தேடி கட்சியில் இணைக்கும் பணிகள் சம்பந்தரால் தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இந்தவகையில்தான் தன்னை புலனாய்வு பொறுப்பதிகாரி எனச்சொல்லிவரும் வெடித்தம்பி கடந்த இறுதிப்போரின் பின்னர் இந்தியாவில் இந்து ஆலையம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டு தமிழக சிறையில் இருந்தார் பின்னர் இலங்கை இந்திய புலனாய்வு பணிகளுக்காக இலங்கைக்கு களமிறக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவரிடமிருந்து கிடைத்த தகவல்களை வைத்து ஏற்கனவே சிறையிலிருப்பவர்களை விசாரணை செய்துவருகின்றபோதும் அவர் சுதந்திரமாகவே செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
சாதாரண போராளிகளே இரண்டாண்டு புனர்வாழ்வு பெற்றபோது தன்னை புலனாய்வு அதிகாரியென சொல்லும் வெடித்தம்பி எவ்வாறு புனர்வாழ்வு பெறாமல் அரச கட்டுப்பாட்டில் இயங்க வைக்கப்பட்டார் என்பதும் தற்போது வெளியே வந்து தலைவர் காட்டியது தமிழரசு கட்சியெனவும் அதில் ஏனையவர்களும் இணைந்து பயணிக்குமாறு கோருவதும் ரணில் ஆட்சியில் ஒன்றும் புதிதல்லவே.