Breaking News

24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை



சிறிலங்காவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும் அதிகமான மிககனமழை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை எச்சரித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, வடமேல், மேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும், இன்று கடுமையான மழை பொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரத்துக்குள் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல் தாக்கத்தில் இருந்து பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியிலான கடந்த சில நாட்களாக, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.