Breaking News

தோராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்கு இராணுவம் தடை - மக்கள் விசனம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிக்காகச் சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்துக்குமிடை யில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேரா வில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானப் பணிக்காக நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (07112017) சென்ற மாவீரர்களின் உறவினர்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனு ஸ்டிக்கும் வகையில் வன்னி விளா ங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல்லம் மற்றும் கிளிநொச்சி கனகபுரம் துயி லும் இல்லம் ஆகியன பொது மக்களி னால் சிரமதானம் முன்னெடுக்கப்ப ட்டுள்ளது.  அந்த வகையில் முல்லை த்தீவின் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை நேற்றையதினம் சிரமதானம் செய்வதற்காக மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் சென்றிருந்தனர்.


தேராவில் மாவீரர் துயிலுமில்லப் பகுதியில் தற்போது முகாம் அமைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சிரமதானப் பணிகளை செய்ய விடாத நிலையில் அவர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் சிரமதானம் செய்ய வருகை தந்த மக்களை இராணுவத்தினர் புகை ப்படம் மற்றும் வீடியோ பதிவின் மூலம் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்க ப்படுகின்றது. 

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்வதற்கும் மாவீரர்களை நினைவு கூருவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தடை விதிக்கின்றமை கவலையளி ப்பதாக  மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 அன்று....
இன்று.....