Breaking News

வித்தியா கொலை விசாரணையில் முதல் மாவை ! அடுத்தது சிறீதரனாம்!

யாழ் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலையான சம்பவத்தில் கைதாகியுள்ள சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீளவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைவாக யாழ் மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா ஜாவிடம் நேற்று விசார ணைகள் நடைபெற்றதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர். 

வித்தியா கொலையின் பிரதான குற்ற வாளியான சுவிஸ்குமார் கைதாகிய வேளை தப்பிச் சென்ற சம்பவத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக எடுத்து குற்றப் புலனா ய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.  இச் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெய சிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் லலித் ஜெயசிங்க சந்தேக நபரை அரசியல் அழுத்தம் காரணமாகவே தப்பிச் செல்ல அனுமதியளித்ததாக யாழ்ப்பாணத்தில் இரகசிய தகவல் பரவியது. 

இதற்கமைய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் இவ்விடயமாக விசா ரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் விட யம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.