Breaking News

அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவெய்த போராடுவோம் – சிவாஜிலிங்கம்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருக்கும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகளை நிறை வேற்றுவத ற்காக தொடர்ந்தும் போராவோமென வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் விவரித்துள்ளார். 

தமது வழக்குகளை வவுனியா நீதி மன்றத்திலிருந்து அனுராதபுரம் நீதி மன்றுக்கு மாற்ற வேண்டாமெனக் கோரி, தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 40 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தி ருந்தனர்.

தற்போது அப் போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், யாழ். ஊடக அமை யத்தில்  நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், தமது வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பின் அடிப்படை யில் போராட்டத்தை கைவிடுங்கள் என அரசியல் கைதிகளிடம் கேட்பதென  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாங்களும், பல்கலைக்கழக மாணவர்களும் அனுராதபுரம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்திருக்கின்றோம். இந்நிலையில் அரசாங்கம் ஏமாற்றியதாக  பேசிக்கொண்டு உலாவ இயலாது.

ஜனாதிபதி செயலகம் தொடர்ந்தும் எம்மோடு பேசி கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆளுநர் என்னை தொடர்பு கொண்டு அரசாங்கம் இந்த பிரச்சினையை மிக விரைவாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கி ன்றது.

எனவே மிக கூடிய விரைவில் இப் பிரச்சினை தீர்க்கப்படுமென  கூறியிருக்கி ன்றார். ஆகவே, அரசாங்கம் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான காலக்கெடு நிறைவடையவில்லை.

அரசாங்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. எனவே, அதற்காக சற்று பொறுக்க வேண்டும். அதனையும் மீறி அரசாங்கம் ஒன்றை யுமே செய்யவில்லை என்றால் அதற்கு அப்பால் எங்களுடைய போராட்ட ங்கள் நிச்சயமாக கனதியானதாக இருக்கும்.

அதனை மக்கள் நிச்சயமாக பார்ப்பார்கள். இவ் விடயம் அரசியல் கைதிகளின் உயிர் சம்மந்தப்பட்ட விடயம் அவர்களை சும்மா சாக விட முடியாது.