மாவீரர்களுக்கு அச்சமின்றி சுடரேற்றிட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களை அச்சமின்றி நினைவு கூறுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது மக்களிடம் அழை ப்பு விடுத்துள்ளது.
மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படும் போது இரா ணுவப் புலனாய்வாளர்கள், மற்றும் பொலி சார் அச்சுறுத்தல் விடுக்கின்றமை தொட ர்பில் மக்கள் அச்சமடையத் தேவையி ல்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியா லயத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெ டுக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மேற்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.